2014-12-05 16:32:46

ஐரோப்பாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்தவர்கள், ஆனால் பெண்களுக்கு ஊதியம் குறைவு


டிச.05,2014. உலகின் பல பாகங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படும் நிலை காணப்படுவதாக, அனைத்துலக தொழிலாளர் நிறுவனமான ILOவின் புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
பல தொழில்துறைகளிலும் பெண் ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது. அதிகம் படித்திருந்தும், அதிகம் அனுபவம் இருந்தும், அதிகமான உற்பத்தித் திறன் இருந்தும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
வேலைவாய்ப்புத் தொடர்பான தகுதிகளில் ஆண்களைவிட அதிகப் புள்ளிகள் பெரும் பெண்களுக்கு கூடுதலான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ILO பரிந்துரைத்துள்ளது.
ஆண்-பெண் ஊதிய இடைவெளியில் நாட்டுக்கு நாடு நிறைய வேறுபாடும் இருக்கிறது என்றும், பல்வேறு காரணங்கள் இந்த இடைவெளியை உண்டாக்குகின்றன என்றும் ஜெனீவாவில் ILO சார்பாக பேசவல்ல அதிகாரி கூறினார்.
ஐரோப்பாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் படித்தவர்கள் எனினும், இந்த ஊதிய இடைவெளி 100 யூரோக்களிலிருந்து 700 யூரோக்கள்வரை வேறுபடுகின்றது என்றும், 38 நாடுகளில் ஏறக்குறைய 4 விழுக்காட்டிலிருந்து 36 விழுக்காடுவரை இவ்வேறுபாடு காணப்படுகின்றது என்றும் அந்நிறுவனம் கூறியது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.