2015-09-21 16:05:00

அசீரியத் திருஅவையின் புதிய முதுபெரும் தந்தைக்கு வாழ்த்து


செப்.21,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிநாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டாலும், பிற உலக நடப்புகளையும் மறந்துவிடவில்லை என்பதுபோல், கீழை அசீரியத் திருஅவையின் முதுபெரும் தந்தையாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதுபெரும் தந்தை Mar Gewargis Sliwa அவர்களுக்கு தனது நல்வாழ்த்துத் தந்திச் செய்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்கத் திருஅவைக்கும், கீழை அசீரிய திருஅவைக்கும் இடையே நிலவும் உடன்பிறப்பு பிணைப்புகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும், இந்த உறவும், நட்பும் தொடர்ந்து வளரவும் ஆழப்படவும் தான் செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதுபெரும் தந்தை Mar Dinkha IV அவர்கள் இறந்ததை முன்னிட்டு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய முதுபெரும் தந்தை Sliwa அவர்கள், 1941ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஈராக்கின் Habbaniyaல் பிறந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.