2015-10-02 16:32:00

ஊழலுக்கு எதிரான தெளிவான திட்டங்கள் அவசியம்


அக்.02,2015. தென்னாப்ரிக்காவில் இடம்பெறும் இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தென் பிராந்திய ஆப்ரிக்க ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

தென்னாப்ரிக்காவில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட, தென் பிராந்திய ஆப்ரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Abel Gabuza அவர்கள், ஊழலுக்கு எதிரான தெளிவான திட்டங்கள் அவசியம் என்று கூறினார்.

அரசியல் ஊழல் குறித்து காவல்துறை நடத்திய பல விசாரணைகள் அரசின் தலையீட்டால் தடை செய்யப்பட்டன என்றுரைத்த ஆயர் Gabuza அவர்கள், இந்த விசாரணைகள் அரசின் தலையீடு இன்றி நடத்தப்பட மக்களவை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.