2015-12-02 15:26:00

திருத்தந்தை ஆசீர் பெற்ற பொம்பெய் செபமாலை அன்னை வாகனம்


டிச.02,2015. பொம்பெய் (Pompeii) நகரின் செபமாலை அன்னை உருவம் தாங்கிய நடமாடும் சிற்றாலயம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரைக்கு முன்னதாக அர்ச்சித்தார்.

பொம்பெய் செபமாலை அன்னை பக்தியை வளர்க்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அருள்பணி வரலாற்றில் திருத்தந்தையின் ஆசீர் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொம்பெய் செபமாலை அன்னையின் உருவம் பதிந்த இந்த வாகனம், ஒரு சிற்றாலயமாக, இத்தாலியின் அனைத்து மறைமாவட்டங்களிலும் வலம்வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொம்பெய் நகரையும், செபமாலை அன்னை திருத்தலத்தையும் வடிவமைத்த Bartolo Longo என்பவர், தன் மனமாற்றத்திற்கு செபமாலையே ஒரு முக்கிய காரணம் என்று கூறியதாக வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

பொம்பெய் செபமாலை அன்னையின் பக்தி, இத்தாலியில் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மால்டா ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.