2016-05-23 15:15:00

சீன கத்தோலிக்கர் ஒப்புரவின் அடையாளங்களாக மாறட்டும்


மே,23,2016. சீனக் கத்தோலிக்கர், பிற மதங்களைப் பின்செல்வோருடன் இணைந்து, அன்பு மற்றும் ஒப்புரவின் தெளிவான அடையாளங்களாக மாறுவார்களாக என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒப்புரவின் அடையாளங்களாக வாழ்வதன் வழியாக, சீனர்கள், சந்திப்பு மற்றும் நல்லிணக்கத்தின் உண்மையான கலாச்சார சந்திப்பை ஊக்குவிப்பார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, எப்பொழுதும் வரவேற்கவும், எப்பொழுதும் மன்னிக்கவும் தயாராய் இருப்பவர் இறைவன் என்றும் கூறினார். 

சீனாவில், ஷேசன் சகாய அன்னை மரியா விழா, மே 24, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படுவதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, சீனாவில் வாழும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், கடவுளின் அன்புப் பிரசன்னத்தின் அடையாளங்களை உணர்வதற்கான சக்தியை, அன்னை மரியா அருள்வாராக என்று செபித்தார்.

சீனத் திருஅவை செப நாளைச் சிறப்பிக்கும் இந்நாளில், நாம் எல்லாரும் செபத்தால் அம்மக்களுடன் ஒன்றித்திருப்போம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.